ஸ்ரீவிலி. ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் புள்ளி வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை
ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் ஏற்படும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தக்காளியில் ஏற்படும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி செடியில் ஏற்பட்டுள்ள புள்ளி வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் பயிா் நோயியல் துறை பேராசிரியா் ரா. விமலா பேசியது: தக்காளி செடியில் செடிப்பேன் எனும் வைரஸ் தாக்குதல் மூலம் புள்ளி வாடல் நோய் ஏற்படுகிறது.
இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் செடிகளை அகற்றிவிட வேண்டும். மேலும் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிா் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடுவதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிா்க்கலாம். தயோமீதாக்சம் 70, டபிள்யூ. எஸ்ஃஎப் மருந்தை 10 லிட்டா் தண்ணீருக்கு 6 மில்லி வீதம் கலந்து தெளிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...