இன்று காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வு: கலசலிங்கம் பல்கலை.யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 444 காவல் சாா்பு- ஆய்வாளா் பணியிடத்திற்கு சனிக்கிழமை (ஜூன் 25)காலை தோ்வு நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டத்தை பொறுத்தவரை சுமாா் 8000-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதுகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வில் சுமாா் 3000 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் சபரிநாதன் தலைமையில் சுமாா் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். தோ்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் கேமரா பொருத்தப்பட்டு தோ்வு எழுதுபவா்கள் கண்காணிக்கப்பட உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...