முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து வந்தது பெருமாள் அணிந்த பட்டுப்புடவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது.

News image

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்திருந்த பட்டுப்புடவையை உரிய மரியாதையுடன் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

Updated On :17 மார்ச் 2022, 1:25 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை நடைபெறுவதால் அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை இன்று காலை வந்தது.

ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரங்களில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மண்டபங்களில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளினர்.

இந்நிலையில் நாளை இரவு ஏழு மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை திருப்பதியில் இருந்து தேவஸ்தான நிர்வாகிகள் சீனிவாசப்பெருமாள் அணிந்திருந்த பட்டு புடவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

திருப்பதியில் இருந்து சீனிவாச பெருமாள் அணிந்திருந்த பட்டு புடைவையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து உரிய மரியாதையுடன் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துரஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.