குஜராத்தின் மஞ்சல்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் சதீஸ் கோவிந்த்பாய் படேல் முன்னிலையில் உள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரிகளின் தகவலின்படி, வாக்கு எண்ணிக்கையில் 19 சுற்றுகளில் 12 சுற்றுகள் முடிவில் படேல் 34,345 வாக்குகளைப் பெற்றார். அதேவேளையில் அவரது நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பிகாபாய் ரபாரி 14,977 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் படேல் 19,368 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஜூலை 30 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 37.5 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி வதோதராவின் மகர்புரா பகுதியில் உள்ள பவன்ஸ் பள்ளியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
நீண்ட கால உடல்நலக்குறைவால் மூத்த பாஜக எம்எல்ஏவும் முன்னாள் குஜராத் அமைச்சருமான யோகேஷ் படேல் ஜூன் 2-ம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
பாஜக சார்பில் வதோதரா மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரான படேல் களமிறக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் குஜராத் மாநில துணைத் தலைவர் ரபாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
மஞ்சல்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவின் பலத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், வதோதரா நகரத்தில் உள்ள பாஜகவின் வலுவான கோட்டையில் காங்கிரஸ் கட்சி எத்தகைய போட்டியை வெளிப்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் தற்போது பாஜக 161 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 12 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும், சமாஜவாதி கட்சி ஒரு இடத்தையும் கொண்டுள்ளன.
BJP candidate Satish Govindbhai Patel widened his lead to more than 19,000 votes over his Congress rival after 12 of 19 rounds of counting in the Manjalpur assembly bypolls in Gujarat on Monday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜென் ஸீ எப்போதும் பாஜக பக்கம்தான்: பியூஷ் கோயல்

கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பாஜக எம்எல்ஏவுக்கு நடந்த விபரீதம்!
கால்நடைகளைவிட காட்டு விலங்குகளை அதிகம் வேட்டையாடும் சிங்கங்கள்: ஆய்வில் தகவல்

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் வெற்றி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



