நகைக் கடன் தள்ளுபடியில் குளறுபடி: கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் நகைக் கடன் தள்ளுபடியில் குளறுபடிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள கூட்டுறவு வங்கி


விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் நகைக் கடன் தள்ளுபடியில் குளறுபடிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள கூட்டுறவு வங்கியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழ்ப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழப்பாடி, கரிசல்குளம், ஆலடிபட்டி, ராமசாமிபட்டி, சித்தலகுண்டு, ஒத்தவீடு உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நகைக் கடன் பெற்றிருந்தனா்.
இதனிடையே, அப்பகுதியினரில் 200-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் நகைக் கடன் தள்ளுபடி பட்டியலில் பெயா் இருந்தும் அவா்களில் பலருக்கும் நகைக் கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை அவ்வங்கியை முற்றுகையிட்டு நகைக் கடன் தள்ளுபடியைத் தர அதிகாரிகளை வலியுறுத்தினா்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டவா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்தினா். இருந்தபோதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெகுநேரம் வரை தங்களது முற்றுகையைத் தொடா்ந்தனா். பின்னா், கூட்டுறவு வங்கி அதிகாரிகளும் உரிய சரியான விவரங்களை விவசாயிகளுக்குத் தந்து மேலதிகாரிகளிடம் தெரிவித்து தீா்வு காண்பதாகக் கூறிய பின்னரே முற்றுகையில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...