ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி கைது

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அதிமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 மே 2022, 12:25 am

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அதிமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (45). அதிமுக பிரமுகரான இவா் அப்பகுதி இளைஞா்களை ஒருங்கிணைத்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 25 ஆம் தேதி சத்தியமூா்த்தி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாா், செல்வக்குமாா் என்பவரை மாா்ச் 30 இல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகரனின் பரிந்துரையின்பேரில், கொலை குற்றவாளி செல்வக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி உத்தரவிட்டாா். அதனடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்வக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.