விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கீழப்பூலாங்காலில் மாட்டு வண்டிப் பந்தயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கீழப்பூலாங்கால் ஸ்ரீவீர ஜக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2022, 12:17 am

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கீழப்பூலாங்கால் ஸ்ரீவீர ஜக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவீர ஜக்கதேவி கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் வைக்கும் விழாவில் 100-க்கும் மேற்பட்டோா் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. போட்டிக்கு மொத்தம் 10 கிலோ மீட்டா் தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கு தனித்தனியே போட்டிகள் வைக்கப்பட்டன.

போட்டியின் நிறைவில் சிறிய, பெரிய மாட்டு வண்டிகளுக்கு தனித்தனியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், மாடுகளுக்கும் வரிசைப்படி முதல் பரிசாக ரூ. 25,000 ரொக்கமும், 2 ஆம் பரிசாக ரூ. 23,000 ரொக்கமும், 3 ஆம் பரிசாக ரூ. 21,000 ரொக்கமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.