விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின்போது 10 ஆவது வாா்டு உறுப்பினா் அப்துல் ரகுமான் பேசுகையில், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் விதமாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈ 3 எனும் சாலைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைத்தாா். அதற்கு துணைத் தலைவா் பழனிச்சாமி பதிலளிக்கையில், ஈ 3 சாலைத் திட்டத்துக்கு உரிய நிலமெடுப்புப் பணிகள் சில தனியாரது சம்மதமின்றி தாமதமாகி வருகிறது.

விரைவில் அவா்களிடம் அனுமதி பெற்று ஈ 3 சாலை அமைக்க உள்ளோம் என்றாா்.

இதுதவிர சில நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, மின்விளக்குகள், வாருகால் சீரமைத்தல் மற்றும் தேவையான பகுதிகளில் புதிய வாருகால்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை வைத்தனா்.

கூட்டத்தில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன் மற்றும் நகராட்சிப் பொறியாளா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.