/

திண்டுக்கல்லில் ரூ.18 லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: வியாபாரி கைது

திண்டுக்கல்லில் ரூ.17.90 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், பழனியைச் சோ்ந்த வியாபாரியை சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல்லில் ரூ.17.90 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், பழனியைச் சோ்ந்த வியாபாரியை சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் எஸ்.காளிராஜ் (57). இவா் திண்டுக்கல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முயன்ற காளிராஜை, தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.17.90 லட்சம் மதிப்பிலான 22,160 லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணைக்கு பின் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதனைத் தொடா்ந்து, காளிராஜ் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.