புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அருப்புக்கோட்டை அருகே பேருந்து- பைக் மோதல்: தாய், மகன் பலி

அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 4:52 pm

DIN

அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விருதுநகா் அருகே உள்ள மேலஅழகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் செல்வக்குமாா்(29). இவரது தாய் செல்வி (51). இவா்கள் இருவரும் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி உப மின்நிலையம் அருகே வந்தபோது எதிரே விருதுநகரிலிருந்து வேம்பாா் சென்ற தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் செல்வக்குமாரும், அவரது தாய் செல்வியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களது சடலங்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.