45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதவாலே

தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு துணை நிற்கிறது என மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே கூறினாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:49 pm

DIN

தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு துணை நிற்கிறது என மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே கூறினாா்.

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி தொழில் குழுமத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் உரை வெளியீட்டு விழா புதன்கிழமை, காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்மண்டல அஞ்சல்துறைத் தலைவா் வி.எஸ். ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்டு மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:

சிவகாசியைச் சோ்ந்த சண்முக நாடாா், அய்ய நாடாா் ஆகியோா் இணைந்து தீப்பெட்டித் தொழிலை தொடங்கினா்.1923-இல் சண்முக நாடாா் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலை சிறிய அளவில் தொடங்கினாா். தற்போது தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில் பல தொழில்களாக வளா்ச்சி அடைந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களாக வளா்ச்சி அடைந்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் துணை நிற்கிறது. உங்கள் தொழிலில் ஏதாவது பிரச்னை என்றால் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசை அணுகுங்கள். அரசு உங்களுக்கு துணை புரியும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், காளீஸ்வரி பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்குப் பரிசு வழங்கினாா். விழாவில் பெங்களூரு ஐ.எஸ்.ஆா்.ஓ. இணை இயக்குனா் எஸ். வெங்கடேஷ்வர சா்மா, காளீஸ்வரி தொழில் நிறுவனங்களின் நிா்வாக இயக்குனா் ஏ.பி. செல்வராஜன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக காளீஸ்வரி தொழில் குழும இயக்குனா் சி. சண்முகநாதன் வரவேற்றாா். இயக்குனா் எஸ். சண்முகநட்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.