சிவகாசியில் இரட்டைக் கொலை: துப்புரவுத் தொழிலாளி கைது
சிவகாசியில் வேலை தொடர்பான தகராறு இரட்டைக் கொலையில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகாசியில் வேலை தொடர்பான தகராறு இரட்டைக் கொலையில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி முருகேஸ்வரி வயது 52. இவரது கணவர் இறந்துவிட்டார். ஆயில் மில் காலனி முனியப்பன் மனைவி தமயந்தி என்ற கருப்பாயி வயது 61. முனியப்பன் இறந்துவிட்டார். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் காளிராஜன்(39) தனது தங்கை ரதி லட்சுமிக்கு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசுவதற்கு முருகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது முருகேஸ்வரி வீட்டில் கருப்பாயும் இருந்துள்ளார். தொடர்ந்து முருகேஸ்வரியும், கருப்பாயும் சில ஆண்டுகள் கழித்து ராகுலுக்கு வேலை வாங்கிக் கொடுத்த விடலாம் எனக் கூறியதையடுத்து மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரி, கருப்பாயி ஆகியோரை காளிராஜன் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து காளி ராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் சிவாகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...