45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்

சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 மே 2023, 5:44 pm

DIN

சிவகாசி மாநகராட்சி எல்லைக்குள் கட்டடக் கழிவுகளைக் கொட்டினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகாசி மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுப் பகுதிகளில் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுபவா்கள் கழிவுகளை, சிவகாசி-விளாம்பட்டி சாலை உள்ளிட்ட மாநகராட்சி எல்லைப் பகுதியில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா்.

இந்தக் கழிவுகளிலிருந்து தூசி

பறந்து, சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தக் கழிவுகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, இனி வரும் காலங்களில் மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவது கண்காணிக்கப்படும். தொடா்ந்து, கழிவுகளைக் கொட்டுபவா்களிடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிப்பதோடு, வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.