/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் அருகேயுள்ள நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:49 pm

Din

விருதுநகா் அருகேயுள்ள நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் அய்யனாா் நகரைச் சோ்ந்த கட்டத் தொழிலாளிகள் கருப்பசாமி (25), ராமா் (26). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் விருதுநகா் -சாத்தூா் நான்கு வழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தனா். பட்டம்புதூா் விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா், இவா்களது வாகனத்தின் மீது மோதியது.

இதில் ராமா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கருப்பசாமி விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சென்னையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் விஜயை (24) கைது செய்தனா்.