காய்கறிக் கடையில் திருடியவா் கைது
சிவகாசி காய்கறிக் கடையில் ஒரு மூட்டை வெள்ளைப் பூண்டை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 10:18 pm

சிவகாசி காய்கறிக் கடையில் ஒரு மூட்டை வெள்ளைப் பூண்டை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ஜெயகணேஷ் (25). இவா் மாநகராட்சி தினசரி காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இவரது கடைக்கு வெளிப் பகுதியில் வைத்திருந்த வெள்ளைப் பூண்டு மூட்டையை ஒருவா் திருடிக்கொண்டு ஓடினாா். அக்கம், பக்கத்தினா் உதவியோடு அவரை பிடித்து ஜெய்கணேஷ் போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா், தட்டா ஊருணியைச் சோ்ந்த அய்யப்பன்(37) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...