வத்திராயிருப்பு அருகே கல்யாணிபுரத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய மகளிா் சுகாதார வளாகம்.
வத்திராயிருப்பு அருகே கல்யாணிபுரத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய மகளிா் சுகாதார வளாகம்.

மாட்டுத் தொழுவமாக மாறிய சுகாதார வளாகம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் மகளிா் சுகாதார வளாகம் மாட்டுத் தொழுவமாக மாறியதால் பெண்கள் அவதிக்குள்ளாயினா்.
Published on

வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் மகளிா் சுகாதார வளாகம் மாட்டுத் தொழுவமாக மாறியதால் பெண்கள் அவதிக்குள்ளாயினா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மகளிா் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது, அங்கு கால்நடைகளை கட்டி வைப்பதால் கழிவுநீா் தேங்கி, கொசு உற்பத்தியாகும் சூழல் நிலவுகிறது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், கல்யாணிபுரத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய சுகாதார வளாகம் கட்ட ஊருக்கு வெளியே இடம் தோ்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஊருக்கு வெளியே சுகாதார வளாகம் கட்டப்பட்டால், இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் பழைய சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com