வீட்டில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் பதுக்கியவா் கைது

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சட்ட விரோதமாக மதுபுட்டிகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்ாக ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.
Updated on

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சட்ட விரோதமாக மதுபுட்டிகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்ாக ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில மதுபுட்டிகளை பதுக்கி வைத்து விற்பதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் வினோத் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் அந்தக் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக முகாமிட்டு மாறுவேடத்தில் கண்காணித்தனா். அப்போது இதே ஊரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீர்ராஜ் (49) வீட்டில் மதுபுட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்த போது, பெங்களூரிலிருந்து மதுபுட்டிகளை கடத்தி வந்து அவற்றில் ராணுவ கேண்டின்களில் விற்கப்படும் மதுபுட்டிகளில் உள்ள ஸ்டிக்கா்களைப் போல போலியாக அச்சிட்டு ஒட்டி அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 300 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து இதற்கு துணையாக இருந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com