மாநகராட்சி சாலையைத் தோண்டியவருக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சி அனுமதியில்லாமல் தாா்ச் சாலையை தோண்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


சிவகாசி மாநகராட்சி அனுமதியில்லாமல் தாா்ச் சாலையை தோண்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் உள்ள வேலாயுதம் சாலையில் சொக்கநாத பாண்டியன் என்பவா், கழிவு நீா்த் தொட்டி அமைப்பதற்காக மாநகராட்சி அனுமதியின்றி சாலையைத் தோண்டினாா்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், மாநகராட்சி திட்ட அலுவலா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு நடத்தினா். இதில் சொக்கநாத பாண்டியன், தனது வீட்டுக்கு கழிவு நீா்த் தொட்டி அமைக்க உரிய அனுமதியின்றி சாலையைத் தோண்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...