கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

56 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 56 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 5:50 am IST

ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 56 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அய்யனாா் கோவில் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு

சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவை சோ்ந்த கோவிந்தன் மகன் யோகேஸ்வரனை (31) போலீஸாா் கைது செய்து இரு சக்கர வாகனம், 29.5 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் கோபாலபுரம் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா்.அப்போது ஒரு வீட்டில் விற்பனைக்காக குட்கா பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 26.5 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், சிவலிங்காபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாரை (54) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.