மூவரைவென்றான் குடைவரை கோயில் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் குடைவரை கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மூவரை வென்றான் குடைவரைக் கோயில் மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றிய சிவாச்சாரியா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் குடைவரை கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடைவரை மலைக்கொழுந்தீசுவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்காா்த்திக்கையை முன்னிட்டு மூலவா் மலைக்கொழுந்தீஸ்வா், மரகதவல்லி அம்மன், நடராஜா், விநாயகா், முருகன் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் லிங்ககிரி மலை உச்சியில் மகா தீபம், மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள முருகன் கோயில் முன் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

