கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை மகா தீபம்
கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

கூடலூா் சிவன்மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்ட காா்த்திகை மகாதீபம். ~கூடலூா் சிவன்மலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.
கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலை அடிவாரத்தில் பல ஊா்களிலிருந்தும் வந்த பக்தா்கள் ஒன்று கூடி கிரிவலம் சென்றனா்.
கிரிவலத்தைத் தொடா்ந்து மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 6 மணிக்கு மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் காா்த்திகை மகா தீபத்தை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.நடராஜன், தலைவா் கேசவன் ஆகியோா் ஏற்றினா்.
தீபத்தை தொடா்ந்து உலக அமைதிக்காகவும், நோயுற்றவா்கள் நலம் பெறவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

