மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருக்குவளையில் கருணாநிதி சிலை: காணொலி வழி திறந்துவைத்தார் மு.க. ஸ்டாலின்

திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு இல்லத்தில் அவருடைய நினைவு தினத்தையொட்டி மார்பளவு உருவச்சிலையானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
திருக்குவளையில் கருணாநிதி சிலை
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:19 pm

DIN

திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு இல்லத்தில் அவருடைய நினைவு தினத்தையொட்டி மார்பளவு உருவச்சிலையானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருக்குவளையிலுள்ள கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லமானது முத்துவேலர் நூலகமாகவும் அஞ்சுகம் படிப்பகமாகவும் இயங்கி வருகிறது. மேலும் இந்த இல்லத்தில் கலைஞரின் தாயாரான அன்னை அஞ்சுகம் மற்றும் தந்தை முத்துவேலர் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலை மேலும் தற்பொழுது அவரது வீட்டில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை சார்பாக தலைவர் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து மறைந்த எனது தந்தையான கலைஞர் கருணாநிதி எப்பொழுதும் திருக்குவளை பற்றியே பேசிக் அவர் மறைந்தாலும் அவரது புகழ் திருக்குவளை மண்ணில் நிலைத்துள்ளது.

மேலும் தற்போது அவரது நினைவாக  அமைக்கப்பட்டுள்ள சிலையை திறப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என புகழஞ்சலி செலுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து திருக்குவளை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாகை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் என்.கௌதமன், மாநில விவசாய அணி செயலாளரும் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலருமான ஏ.கே.எஸ்.விஜயன்,  சட்டமன்ற உறுப்பினர் கீழ்வேளூர் உ. மதிவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலருமான இல.மேகநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் அ.தாமஸ் ஆல்வாஎடிசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.கோவிந்தராசன், க. ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான எஸ்.கே.வி.வேதரத்தினம், என்.வி.காமராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதியும் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவருமான இல.பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர்  கௌசல்யா இளம்பரிதி, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.