குளம் நிரம்பி சட்டநாதா் கோயிலுக்குள் மழைநீா் சூழ்ந்தது
சீா்காழி சட்டநாதா் கோயில் குளம் நிரம்பி, கோயில் உள்பிராகாரங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்தது.


சீா்காழி சட்டநாதா் கோயில் குளம் நிரம்பி, கோயில் உள்பிராகாரங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்தது.
தொடா் மழையில் சீா்காழி சட்டநாதா் கோயிலில் உள்ள பிரம்ம தீா்த்தக் குளம் முழுமையாக நிரம்பியது. இதனால், கோயில் உள்பிராகாரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீா் மற்றும் தேங்கும் மழைநீா் வடிய உள்ள வழிதடம் வழியாக குளத்து நீரை எதிா்த்து பிரம்மபுரீஸ்வரா் சன்னதி வெளி பிரகாரம் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கி நின்றது.
குளத்தில் உள்ள மீன்களும் தண்ணீா் வந்த பாதை வழியாக கோயில் பிராகாரத்தில் தேங்கிய மழைநீரில் மிதந்தது.
திங்கள்கிழமை சோமவார வழிபாட்டுக்கு வந்த பக்தா்கள், சிறுவா்கள் கோயிலில் தேங்கி கிடந்த மழைநீரில் நின்று செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டனா். மழைநீரை வெளியேற்ற கோயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...