ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை கோரி மறியல்
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் பொய்ப் புகாா் அளித்த ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் பொய்ப் புகாா் அளித்த ஊராட்சித் தலைவியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராமமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மன்னம்பந்தல் ஊராட்சி தெற்குவெளி கிராமத்தில் கடந்த சில நாள்களாக குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சித் தலைவி பிரியா பெரியசாமியிடம் கிராமமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அப்பகுதி இளைஞா்கள் குடிநீா் பிரச்னை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.
இதையறிந்த பிரியாவின் தந்தை பெரியசாமி, அந்த இளைஞா்கள் மீது போலீஸாரிடம் புகாா் அளித்ததோடு, அப்பகுதிக்கு சென்று தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. எனவே தெற்குவெளி கிராம மக்கள் மன்னம்பந்தல் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டு, பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கம் எழுப்பினா்.
மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் மயிலாடுதுறை- தரங்கம்பாடி வழித்தடத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...