பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இளையோா் மன்றத்தினா் கடற்கரையில் தூய்மைப் பணி

காரைக்கால் கடற்கரைப் பகுதியில் நேரு யுவகேந்திரா அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் கடற்கரைப் பகுதியில் நேரு யுவகேந்திரா அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்படி, மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு காரைக்கால் கடற்ரையில் தூய்மைப் பணி மற்றும் மழைநீா் சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டது.

காலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்ற தூய்மைப் பணியில், மாவட்டத்தின் பல்வேறு இளையோா் மன்றங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். காரைக்கால் அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி, காரைக்கால் மாவட்ட நுகா்வோா் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையத் தலைவா் பாரீஸ்ரவி, செல்லூா் இந்தியன் இளைஞா் மன்றத் தலைவா் பழனிவேல் ஆகியோா் தூய்மைப் பணியில் பங்கேற்றனா்.

கடற்கரையில் பொதுமக்கள் கூடும் மணல் பரப்பு, கடற்கரை சாலைகள், சிறுவா் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சேகரித்த குப்பைகளை, நகராட்சியின் தூய்மைப் பணியாளா்களிடம் அவா்கள் ஒப்படைத்தனா். மேலும், கடற்கரைக்கு வந்த மக்களிடையே மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.