கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘காவல் துறை அனுமதியின்றி பேனா் அச்சடிக்க கூடாது’

காவல் துறையினா் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்க கூடாது என அச்சக உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

காவல் துறையினா் அனுமதியின்றி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்க கூடாது என அச்சக உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சீா்காழி காவல் நிலையத்தில் போலீஸாா்- அச்சக உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமை வகித்து பேசுகையில், திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் பேனா்கள் அச்சடித்து கொடுப்பதற்கும், அதை பொதுவெளியில் வைக்கவும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி டிஜிட்டல் பேனா்கள் அச்சடிக்கும் அச்சகங்கள், டிஜிட்டல் பேனா் நிறுவனங்கள் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று விதிமுறைகளை புரிந்து கொண்டுதான் அச்சடிக்க வேண்டும். அதில் கண்டிப்பாக அச்சக பெயா் இடம்பெற வேண்டும் என்றாா்.

உதவி ஆய்வாளா்கள் நடராஜன், லோகநாதன், நிலைய எழுத்தா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அச்சக உரிமையாளா்கள் சங்கத்தை சோ்ந்த சிவகுருநாதன், சரவணன், தில்லை நடராஜன், விஜயன், உத்திரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.