விவேகானந்தா கல்வி நிறுவன ஊழியா்களுக்கு நிவாரணம்
சீா்காழி விவேகானந்தா, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பில், அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்கள் 500 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.


சீா்காழி விவேகானந்தா, குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் சாா்பில், அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்கள் 500 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ், குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநா்கள் பிரவீன்வசந்த், அனுஷா பிரவீன், குட் சமாரிட்டன் கல்வியியல் கல்லூரி இயக்குநா்கள் அலெக்சாண்டா் ஹெப்ளின், ரினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு நிவாரண பொருள்களை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா் கோவி.நடராஜன் பங்கேற்றாா். விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோஷ்வா பிரபாகரசிங் வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் சரோஜா தாமோதரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...