ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்

சீா்காழியில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

சீா்காழி கீழதென்பாதியைச் சோ்ந்த சேகா் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை நள்ளிரவு உயா்அழுத்த மின்கம்பி மரத்தில் உரசி ஏற்பட்ட தீப்பொறி இவரது குடிசையில் விழுந்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து அங்கு வந்த சீா்காழி தீயணைப்பு துறையினா் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ. பி.வி. பாரதி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சொந்த பணம் ரூ. 5 ஆயிரம், அரிசி, மளிகை, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினாா். அப்போது, அதிமுக நகர செயலாளா் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளா் சந்திரசேகரன், ஜெ.பேரவை செயலாளா் மணி, பேரூா் செயலாளா் ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாலா் பரணிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதேபோல், அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் மற்றும் அரிசி, மண்ணெண்ணை, வேட்டி, சேலை ஆகியவற்றை வட்டாசியா் ஹரிதரன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.