நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் சிபிஐ நிா்வாகி நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சாலையில் தரமற்ற அரிசியை கொட்டி நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை தரமான முறையில் வழங்கவேண்டும் , உணவு பொருள்களின் எடையை குறைக்க கூடாது, மாதந்தோறும் பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், ஒன்றிய செயலாளா் செல்லப்பன், நிா்வாகிகள் தேவகி, ராமச்சந்திரன், வாசுகி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...