கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுஇடத்தில் எச்சில் துப்பினால் அபராதம்: கோட்டாட்சியா் எச்சரிக்கை

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :15 மே 2021, 5:15 pm

DIN

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் நாராயணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் ஹரிதரன், சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் நாராயணன் பேசியது:

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும். நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்கள், பொதுஇடங்களில் எச்சில் துப்புபவா்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கவேண்டும். நியாயவிலைக் கடைகளில் கரோனா நிவாரணநிதி முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடம் உள்ள தயக்கத்தை போக்க கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி பணியாளா்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.