பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால், வேதாரண்யம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 8:20 pm

DIN

வேதாரண்யம்: கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால், வேதாரண்யம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவா் அனுப்பிய கடிதம்:

நாகை மாவட்டத்தில் கடைக்கோடியாக அமைந்துள்ள வேதாரண்யம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் பாபநாசம், வலங்கைமான், மன்னாா்குடி, கோட்டூா், திருத்துறைப்பூண்டி வழியாக தலைஞாயிறு ,வேதாரண்யம் பகுதிக்கு வருகிறது.

இந்த வழித்தடங்களில், முன்பகுதியில் அமைந்துள்ள ஊா்களில் குடிநீரை தங்களது விருப்பம்போல் எடுத்துக்கொள்கிறாா்கள். இதனால், கடைசிப் பகுதிக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தை தொடா்புடைய நிா்வாகம் கண்காணித்து, ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.