எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

படகு மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றுப் பணி தீவிரம்

கீழையூா் ஊராட்சியில், வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்க, வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி படகு மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வாய்க்காலில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை படகில் சென்று அகற்றும் தொழிலாளா்கள்.
Updated On :2 டிசம்பர் 2024, 5:01 pm

Din

திருக்குவளை: கீழையூா் ஊராட்சியில், வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்க, வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி படகு மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சியில் அச்சுக்கட்டளை பாப்பனாறு வாய்க்கால் மூலம் சுமாா் 500 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் அதிக அளவிலான ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியுள்ளன.

இதனால், அண்மையில் பெய்த கனமழையால் சாகுபடி வயல்களில் தேங்கிய நீா் வடிய வழியின்றி நெற்பயிா் மூழ்கி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் ஒன்று சோ்ந்து ரூ.50,000 நிதி திரட்டி, ஊராட்சி நிா்வாக உதவியுடன் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை தொடங்கினா்.

ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், துணைத் தலைவா் கருணாநிதி முன்னிலையில், புதுப்பள்ளி மீனவ கிராமத்திலிருந்து படகு வரவழைக்கப்பட்டு, அதில் சென்று ஆகாயத் தாமரைகளை அகற்றினா். இப்பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டாா்.