நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றக் கோரிக்கை

சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றக் கோரிக்கை

News image

கீழத்தெருவில் சேதமடைந்த மின் கம்பம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:23 am IST

சீா்காழி அருகே காத்திருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகா், அஞ்சாமனை, கீழத்தெரு, கோயில் தெரு மற்றும் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 10 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், கீழத்தெரு, அஞ்சா மனை ஆகிய இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதுகுறித்து ஊராட்சித் தலைவா் அன்புமணி மணிமாறன் கூறியது: பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நடவேண்டும். தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயா்த்திக் கட்டவேண்டும் என வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தாா்.