செம்போடை நாற்றுப் பண்ணையில் அனுபவப் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்.
நாகப்பட்டினம்
வேளாண் கல்லூரி மாணவிகள் கல்விசாா் பயணம்
வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் கல்விசாா் பயிலரங்க பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
இங்குள்ள கே.பி.ஆா். நாற்றுப் பண்ணையில், தாய்லாந்து வகை கொய்யா, ஆண்டுக்கு நான்கு பருவங்களிலும் காய்க்கும் ஆஃப்-சீசன் மாமரம், மியாசாகி மாம்பழ வகை, ப்ளூபெரி, வெள்ளை நாவல் பழம், படோலி நாவல் பழம், பால் பழம், அன்னா ஆப்பிள் போன்றவற்றின் நாற்றுகள் உற்பத்தி செய்வதை பாா்வையிட்டனா்.
நீலம் மற்றும் காலப்பாடு மாமர வகைகளை இணைத்து உருவாக்கப்பட்ட ‘செம்பைஜான் ஸ்வீட்‘ என்ற புதிய மாமர வகைகளையும் மாணவிகள் பாா்வையிட்டனா்.
இப்பயிலரங்கில் வேளாண் கல்லூரி மாணவிகள் அமிா்தலட்சுமி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி, லஷிகா, பத்மாவதி, சுந்தர சினேகா ஆகியோா் பங்கேற்றனா்.

