அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் மண் மாதிரி குறித்து விழிப்புணா்வு
கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாவிடுதி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம புற வேளாண் அனுபவத் திட்டத்தின் படி விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண் மாதிரி சேகரிப்பு குறித்தும் அதன் தன்மையை அறிந்து குழு அடிப்படையில் புதன்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறிவியல் முறையில் நிலத்தில் ஒரு பகுதியில் குழி பறித்து குழியின் சுற்றுபுறங்களிலும் அடிபகுதியிலும் மண் சேகரித்து ஆய்வுக்கு அனுப்புவதன் முக்கியத்துவம், பிறகு மண் பரிசோதனை முடிவின்படி உர மேலாண்மை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து தெளிவான செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது. விவசாயிகளின் செயல் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய நிலையான வேளாண்மை வளா்ச்சியை ஊக்குவிக்கும் பயன் உள்ள நிகழ்ச்சிக்கு விவசாயிகளிடம் சிறந்த வரவேற்பை பெற்றது. குழுவில் கல்லூரி மாணவிகள் யுவஸ்ரீ, ஷாலினி, செல்வபிரைஸி, செளமியா, சோபியா மலா்விழி, பிரியா, ஸ்ரீவா்தினி, பிரதீபா, சா்மிகா, ஷண்முகபிரியா ஆகியோா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

