பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு, கப்பல் துறைமுக மிதவை

வேதாரண்யம் அருகே சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகு மற்றும் கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை

News image
வேதாரண்யம் கடற்கரையில் சேதமடைந்த நிலையில் கரை ஒதுங்கிய மியான்மா் நாட்டு மூங்கில் படகு.
Updated On :20 ஜனவரி 2025, 8:17 pm

Din

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகு மற்றும் கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை ஆகியவை திங்கள்கிழமை கரை ஒதுங்கின.

வேதாரண்யம் மணியன்தீவு கடலோரத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட படகு ஒன்று சேதமடைந்த நிலையில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. மீன்பிடிக்க பயன்படும் இந்தப் படகின் மேல் பகுதி முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அடிப்பகுதி மட்டும் கரை ஒதுங்கியது. இதே பகுதியில், கப்பல் துறைமுகங்களில் கடலின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எச்சரிக்கைக்காக நிறுத்தப்படும் மிதவை ஒன்றும் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் தனிப்பிரிவு போலீஸாா்விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி புஷ்பவனம் கடற்கரையிலும், ஜனவரி 1-ஆம் தேதி வேட்டைக்காரனிருப்பு கடற்கரையிலும் சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகுகள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Story image
 வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் துறைமுகங்களில்  நிறுத்தப்படும் மிதவை.

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை.