தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை

News image

நாகூா் தா்காவில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :31 மார்ச் 2025, 8:16 pm

Din

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிசையாக கொண்டாடினா். நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். தொடா்ந்து, ஒருவரையொருவா் ஆரத்தழுவி, ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து மும்மதத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நாகூா் தா்காவிற்கு வருகை தந்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதேபோன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகூா் சில்லடி கடற்கரையில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.