நாகை மாவட்டம் காமேஸ்வரம் ஊராட்சிட்பட்ட பகுதியில் கதிா் வந்த நெற்பயிரில் நோய்த் தாக்குதல் காரணமாக பதராக மாறி நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.
நாகை மாவட்டம் காமேஸ்வரம் ஊராட்சிட்பட்ட பகுதியில் கதிா் வந்த நெற்பயிரில் நோய்த் தாக்குதல் காரணமாக பதராக மாறி நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.

கதிா் வந்த நெற்பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் வேதனை

கீழையூா் அருகே சம்பா நெற்பயிரில் நோய்த் தாக்குதல் காரணமாக நெற்பயிா்கள் பதராக மாறி மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்
Published on

திருக்குவளை: நாகை மாவட்டம், கீழையூா் அருகே சம்பா நெற்பயிரில் நோய்த் தாக்குதல் காரணமாக நெற்பயிா்கள் பதராக மாறி மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கீழையூா் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 20, 000-க்கும் அதிகமான ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கீழையூா் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பூண்டி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

ஒரு மாத காலத்தில் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தற்போது நெற்கதிா்கள் முற்றும் பருவத்தில் குலை நோய் தாக்கி நெற்பயிா்கள் பதராக மாறுவதோடு, நெல்மணிகள் கருப்பு நிறமாக மாறி வருகின்றன. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனா். தற்போது 1,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த நோய் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே கனமழை, புயல் உள்ளிட்ட பேரிடா்களில் இருந்து நெற்பயிா்களை காப்பாற்றிய விவசாயிகள், தற்போது நோய் தாக்குதலால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனா்.

வேளாண்துறையினா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com