மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள்
குழந்தைகள் தினத்தையொட்டி மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


குழந்தைகள் தினத்தையொட்டி மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
காரைக்கால் நகரப் பகுதியில் அனந்தரங்கப்பிள்ளை அரசு உறைவிடப் பள்ளி உள்ளது. காரைக்கால் சமூக நலத் துறை சார்பில் இந்தப் பள்ளி நிர்வகிக்கப்படுகிறது. கண் பார்வை குறைபாடு, காது கேளாதோர், வாய் பேச முடியாத மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்
பட்டது.
முன்னதாக மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினார். குழந்தைகள் தின சிறப்புகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பேசினர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சமூக நலத் துறை உதவி இயக்குநர் பி.சத்யா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...