
அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர ஆக.31-இல் சிறப்பு கலந்தாய்வு
திருப்பட்டினம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
திருப்பட்டினம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) 10-ஆம் வகுப்பு முடித்த மாணவியர் தொழில் பயிற்சியில் சேர்வதற்கு 30 இடங்களும், 8-ஆம் வகுப்பு முடித்த மாணவியருக்கான 21 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் 31-ஆம் தேதிக்குப் பின் நிலையத்தில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பின், இடஒதுக்கீடு தளர்த்தப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள அனைத்து இடங்களுக்கும் 31-ஆம் தேதி மாலைஅரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உடனடி அனுமதி நடைபெறும். இதுவரை விண்ணப்பிக்காத அனைத்துப் பிரிவு மாணவிகளும் சிறப்பு ஏற்பாட்டில் பங்குபெற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





