வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு பிப். 11 முதல் 17 -ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்புகள் காரைக்காலில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு இலவசமாக தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
வருகிற 11 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் காலை 7 முதல் 8.30 மணி வரை நடைபெறும் பயிற்சியில், வங்கி அலுவலர் ஆர். சகாய பிராங்க் கலந்துகொண்டு, பயிற்சி அளிக்கவுள்ளார். தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட் கிலெரிக்கல் கேடர் என்கிற தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.