பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த 2 மாத ஊதியத்தை தர வலியுறுத்தியும், மாதந்தோறும் தடையின்றி ஊதியம் தரக்கோரியும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

கடந்த 2 மாத ஊதியத்தை தர வலியுறுத்தியும், மாதந்தோறும் தடையின்றி ஊதியம் தரக்கோரியும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி) ஊழியர் சங்கத்தினர், காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பாக வியாழக்கிழமை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கப் பொறுப்பாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். பி.ஆர்.டி.சி. நிர்வாகம் சீர்கேடாகி வருவதை போக்கும் வகையில், மேலாண் இயக்குரை இடமாற்றிவிட்டு ஐ.ஏ.எஸ். அலுவலரை மேலாண் இயக்குநராக அரசு நியமிக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் மற்ற அரசுத் துறையினருக்கு வழங்கப்படுவதுபோல, பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கும் தாமதமில்லாது ஊதியம் வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை ஆதரித்து காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலர் ஷேக்அலாவுதீன், கௌரவத் தலைவர் ஜார்ஜ், ஜெய்சிங் மற்றும் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள், சங்கப் பிரதிநிதிகள் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com