100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

தங்கம், வெள்ளிக் கவச அலங்காரத்தில் விநாயகர் வழிபாடு

காரைக்கால் பகுதியில் விநாயகர் கோயில்கள் மற்றும் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி

Published On :

காரைக்கால் பகுதியில் விநாயகர் கோயில்கள் மற்றும் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு தங்க கவசம், வெள்ளிக் கவசம் அணிவித்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 
விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் கரைக்கக் கூடிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. புகழ்பெற்று விளங்கும் காரைக்கால் ஸ்ரீ பொய்யாதமூர்த்தி விநாயகர், கோயில்பத்து ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீசித்தி விநாயகர், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீசெங்குந்த விநாயகர், திருநள்ளாறு கோயிலில் உள்ள ஸ்ரீசொர்ணகணபதி, ஸ்ரீஆதி கணபதி, நளன்குளம் அருகே உள்ள ஸ்ரீநளன் கலிதீர்த்த விநாயகர், நேருநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயில்கள் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் வியாழக்கிழமை காலை முதல் வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சந்தனக் காப்பு, வெள்ளிக் காப்பு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்டவை பதார்த்தங்கள் தயார் செய்து வந்து நைவேத்தியம் செய்தனர். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீசொர்ணகணபதி தங்க கவசத்திலும், ஸ்ரீஆதிகணபதி வெள்ளிக் கவசத்திலும், நளன் கலிதீர்த்த விநாயகர் வெள்ளிக் கவசத்திலும், காரைக்கால் வடமறைக்காடு பகுதி பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரசக்தி விநாயகர் தங்க கவசத்திலும், நேருநகர் ஸ்ரீஆனந்த விநாயகர் வெள்ளி கவசத்திலும் அருள்பாலித்தனர். 
கோயில்களில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.