தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

திருநள்ளாறு உள்புற கிராமங்கள் வழியாக கும்பகோணத்துக்கு பேருந்து இயக்கிவைப்பு

திருநள்ளாறு பகுதி உள்புற கிராமங்கள் வழியே கும்பகோணத்துக்கு பேருந்தை புதுச்சேரி அமைச்சர் புதன்கிழமை இயக்கி வைத்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 1:27 am IST

திருநள்ளாறு பகுதி உள்புற கிராமங்கள் வழியே கும்பகோணத்துக்கு பேருந்தை புதுச்சேரி அமைச்சர் புதன்கிழமை இயக்கி வைத்தார்.
காரைக்காலில் இருந்து கும்பகோணத்துக்கு திருநள்ளாறு, அம்பகரத்தூர் வழியாகவும், நெடுங்காடு வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருநள்ளாறு உள்புற கிராமங்களாக தேனூர், கருக்கன்குடி, வலத்தாமங்களம், தேவமாபுரம், பத்தக்குடி ஆகிய கிராமத்தினர் கும்பகோணம் செல்லவேண்டுமெனில் திருநள்ளாறுக்கு சென்று பேருந்தில் பயணிக்கவேண்டியுள்ளது. 
இந்த கிராமத்தினர் பயனடையும் வகையில் அக்கிராமங்கள் வழியே பேருந்து கும்பகோணத்துக்கு இயக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்தையும், திருநள்ளாறு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரையும் நீண்ட காலமாக வலியுறுத்திவந்தனர்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேசி, கருக்கன்குடி வழியே கும்பகோணத்துக்கும், மயிலாடுதுறைக்கும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் புதுச்சேரி அரசின்  போக்குவரத்துத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதன்படி, முதல்கட்டமாக தமிழக அரசின் ஒரு பேருந்தை மேற்கண்ட கிராமங்கள் வழியே இயக்கி மீண்டும் நல்லம்பல், அம்பகரத்தூர் வழியே கும்பகோணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 
இந்த பேருந்தை திருநள்ளாறு பகுதியிலிருந்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கொடியசைத்து இயக்கி வைத்தார். 
பின்னர், அதே பேருந்தில் மேற்கண்ட கிராமங்கள் வழியே அமைச்சர், ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பழனிச்சாமி, தமிழக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செந்தில் மற்றும் பாலாஜி ஆகியோரும் பயணித்தனர்.  மயிலாடுதுறைக்கு அடுத்தக்கட்டமாக இந்த கிராமங்கள் வழிய பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.