குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதைத் தவிர்க்க வலியுறுத்தல்

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதைத்

Updated On :23 ஜனவரி 2019, 5:44 am IST

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதைத் தவிர்த்து, வேலையில்லா பிறருக்கு வாய்ப்பு தரவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி பெற்றோர் சங்கத் தலைவர் அ. வின்சென்ட் வெளியிட்ட அறிக்கை விவரம் : காரைக்கால் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் அதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் அரசுப்பணி தரப்பட்டுள்ளது. இவர்கள் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50  ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு, அரசுத்துறையில் சிறப்பு அதிகாரி என்ற பெயர்களில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு மாத ஊதியம் தரப்படுகிறது. புதுச்சேரி அரசின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கும்போது, பல அரசு  சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியமே இல்லாத நிலையில், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு மாத ஊதியம் வழங்க நிதி கிடைக்கிறது என்பது தெரியவில்லை. எனவே இதுபோன்று ஓய்வுபெற்றவர்களுக்கு அளித்த பணி வாய்ப்பை ரத்து செய்துவிட்டு, படித்த, தகுதியானவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க புதுச்சேரி அரசு முன்வரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.