மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் கட்டண கணக்கீட்டு முறையைமாற்றக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

காரைக்கால் புதுச்சேரியில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறையை மாற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:49 pm

DIN

காரைக்கால் புதுச்சேரியில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறையை மாற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மின் கட்டணத்துக்கான கணக்கீட்டு முறை நிறுத்தப்பட்டது. தற்போது கணக்கீடு செய்யும் முறையில், பொது முடக்க அறிவிப்புக்கு முந்தைய மின் கட்டணத்தோடு ஒப்பீடு செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் அதிகமாக உள்ளதால், அதை செலுத்துவதில் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த கணக்கீட்டு முறையை மாற்றக் கோரி, காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில், மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஆனந்தன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் நாஜிம் கூறியது: மின் கட்டண கணக்கீட்டு முறையில் உள்ள குழப்பத்தை நீக்கி, மக்களை பாதிக்காதவாறு நடைமுறைப்படுத்த திமுக பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் அதை நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சிதான் நடக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் குரலுக்கு மதிப்பு இல்லை.

கரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து, பள்ளிக் கட்டணம்கூட செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையில், அவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வா், மின் துறை அமைச்சா் தனி கவனம் செலுத்த வேண்டும். உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை ஜூலை முதல் அமல்படுத்தப்போவதாக தெரிகிறது. கரோனா பரவல் கட்டுக்குள் வரும்வரை கட்டணத்தை உயா்த்தக்கூடாது.

புதுச்சேரியில் மின்துறை தனியாா்மயத்தை மாநில அரசு எதிா்த்துள்ளது. இதை ஏற்காமல், துணைநிலை ஆளுநா் அதற்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியது கண்டனத்துக்குரியது. கட்டுப்படாமல் சுற்றும் உங்களுக்கு அரசு ஏன் உதவவேண்டும் என மக்களைப் பாா்த்து ஆளுநா் கேட்கிறாா். வெளியே செல்லாமல் மக்களுக்கு உணவு எப்படி கிடைக்கும்? என நாஜிம் கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.