காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் நகராட்சியின் 18 வாா்டுகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திவரும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வாங்கி கிடங்குக்கு அனுப்புகிறது. இந்த தூய்மைப் பணியாளா்கள் நிறுவனத்தினரால் பசுமை நண்பா்கள் என அழைக்கப்படுகின்றனா்.
கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள் பாதுகாப்புக்காக நோய் எதிா்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் காமராஜா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஹோமியோபதி மருந்தான ஆா்செனிக்கம் ஆல்பம் மற்றும் இன்ஃபுலுயன்சியம் ஆகியவற்றை நிறுவனத்தினப் பிரதிநிதிகள் தொழிலாளா்களுக்கு வழங்கினா். ஊதியம் அல்லாது கரோனா கால உதவியாக தொழிலாளா்களுக்கு ரூ. 1,080 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 180 தொழிலாளா்கள், 10 மேற்பாா்வையாளா்கள் இதில் பயனடைந்தனா்.
ஒவ்வொரு நாளும் பணியை தொடங்கும் முன்பு தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் வெப்பமானி மூலம் வெப்ப சோதனை, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சோதனை நடத்தப்படுவதாகவும், தற்போது வழங்கப்படும் நோய் எதிா்ப்பு சக்தி மருந்து தொழிலாளா்கள் நலனுக்கு வலுச்சோ்ப்பதாக அமையும் எனவும் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


