வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இட ஒதுக்கீடு கோரிக்கை: வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஆதித் தமிழா் கட்சி போராட்டம்

காரைக்காலில் இட ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி ஆதித் தமிழா் கட்சி, அருந்ததியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

காரைக்காலில் இட ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி ஆதித் தமிழா் கட்சி, அருந்ததியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டம் குறித்து, ஆதித் தமிழா் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளா் எஸ்.பாபு கூறியது:

தமிழகத்தில் அருந்ததியா்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு நிறைவேற்றவில்லை.

இதைக் கண்டித்து முதல் கட்டமாக அருந்ததியின மக்களின் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.