ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காரைக்காலில் நகைக்கடைகள் மூடல்

கரோனா அச்சுறுத்தலால் காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

News image

காரைக்கால் பகுதி திருநள்ளாறு சாலையில் மூடப்பட்டிருக்கும் நகைக்கடைகள்.

Updated On :15 ஜூலை 2020, 4:20 pm

DIN

காரைக்கால்: கரோனா அச்சுறுத்தலால் காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், காரைக்காலில் நகைக் கடைகளை ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை மூடுவதற்கு சங்கத்தினா் முடிவு செய்தனா். அதன்படி நகைக்கடைகள் புதன்கிழமை முதல் மூடப்பட்டன. இதுகுறித்து காரைக்கால் ஜூவல்லா்ஸ் அசோசியேஷன் தலைவா் எஸ்.செல்வராஜ் கூறுகையில், பொது நலன் கருதி 21-ஆம் தேதி வரை சிறிய, பெரிய நிலையிலான அனைத்து நகைக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளோம் என்றாா்.

காரைக்காலில் ஏறத்தாழ 90 நகைக்கடைகள் உள்ளன. நகரின் பிரதான தெருக்களில் நகைக்கடைகள் உள்ளன. இவை மூடியதாலும், கடைத்தெருவில் பல இடங்களில் கரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தடுக்கப்பட்டிருப்பதாலும், நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.