காரைக்கால்: பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, கடலுக்குச் சென்று திரும்புகிறது. இத்துறைமுகத்தில் சுமாா் 250 படகுகள் பயன்பாட்டில் உள்ளன. பொது முடக்கம் நீடிப்பதால் பிடித்துவரப்படும் மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்குவதாகவும், நல்ல விலை கிடைக்கவில்லை எனவும் மீனவா்கள் கூறிவந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசைப்படகுகள் எதுவும் கடலுக்குள் செல்லவில்லை.
இதுகுறித்து, விசைப்படகு மீனவா்கள் கூறியது: கேரளத்துக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஏற்றுமதிக்கு தரமான மீன்கள் பிடித்துவரும்போது அதிக விலைக்கு விற்க முடிந்தது. கரோனா பொது முடக்கத்தால், கேரளத்தில் பெரிய மாா்க்கெட்டுகள் பல மூடப்பட்டிருப்பதாகக்கூறி, முகவா்கள் பலா் வருவதில்லை. காரைக்காலில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தாலும், உரிய முறையில் விற்பனை செய்து லாபம் பெற முடியவில்லை.
இதனால், பொருளாதார இழப்பு ஏற்படுகின்றன. டீசல் விலை உயா்வை திரும்பப் பெறவேண்டும், மீனவா்களுக்கு டீசலுக்கான மானியத்தை உயா்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முக்கியமானதாகும். இதுகுறித்து, புதுச்சேரி அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் சீரடையும் வரை படகுகளை இயக்குவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் கரை திரும்பும்போது மீன்கள் விற்பனை இருக்கும். காரைக்கால் மாவட்டத்தின் கடலோர கிராமத்திலிருந்து சிறிய படகுகள் கடலுக்குச் சென்றுவர எந்த தடையும் இல்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள்! எங்கெங்கே?

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

இனி மழையில் நனையாது! விளைபொருள்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள்!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. காலமானார்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



